கோடை விடுமுறை வரும் 21ல் துவக்கம் - ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும்

 ''கோடை விடுமுறை, வரும், ௨௧ல் துவங்குகிறது. மீண்டும் ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும்,'' என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், கோபி அருகே, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை, துவக்கிவைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

தமிழகத்தில், 60 கோடி ரூபாய் செலவில், 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பு துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு மாணவர் வரை, அனைத்து கல்வியும் பயிலும் வகையில், 463 கோடி ரூபாய் செலவில், இன்டர்நெட் வசதி செய்யப்படுகிறது.

வரும்,21 முதல் பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. எந்த பள்ளியாக இருந்தாலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பயிற்சியளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மே, 2ல் பள்ளிகளில் சேர்க்கை துவங்குகிறது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படும். புதிய பாடத்திட்டம் மே, 1க்குள் தயாராகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்