பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய  அரசு  உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரேவிதமான கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும்இடைநிலைக்கல்வி இயக்கம் ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமாக (சமந்த்ரா சிக்சா அபியான்) மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தற்போதுள்ள தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பதில் ஒன்று முதல்பிளஸ் 2 வரை கொண்ட ஒரே பள்ளியாக துவக்கப்பட உள்ளது. இந்தபள்ளிகளில், எந்த வகுப்பிலும் மாணவர்களை சேர்க்கமுடியும்.இதற்காக, தமிழகத்தில் 413 ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும்பின் தங்கிய 75 ஒன்றியங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுபுதிய பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கானசாத்தியக்கூறுகள், பள்ளிகள் தேவைப்படும் இடம் குறித்தவிவரங்களை ஆய்வு செய்து, மே 5க்குள் விரிவான அறிக்கை தர, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்