உங்கள் 14 ஆண்டு ஃபேஸ்புக் வாழ்க்கையை ஒரே க்ளிக்கில் டவுன்லோடு செய்யலாம்... உஷார்!
சமூக வலைதளங்கள் ஒரு சாம்ராஜ்யம் என்றால் அதற்கு ராஜா இப்போதைய சூழலில் ஃபேஸ்புக்தான். ஒரு மனிதனோட எல்லாவிதமான உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஊடகமாக தன்னுடைய 14-வது வருடப் பயணத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக்.
ஒரு பையனோ பொண்ணோ வளரும்போது "இந்த டீன் ஏஜ் வந்தா கொஞ்சம் கவனமா இருக்கணும், பிரச்னைகளை எதிர்கொள்ள கத்துக்கணும், சமூகத்தில் தன்னை எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்ற விஷயங்களைப் பேச ஆரம்பிப்பார்கள். டீன் ஏஜுக்குள் நுழைந்துள்ள ஃபேஸ்புக்கும் இதனைப் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தனி ஒருவனாக களத்தில் சிக்ஸர்கள் பறக்கவிட்ட ஃபேஸ்புக்குக்கு இது சோதனை காலம்.
ஆரம்பத்தில் நண்பனின் ஐடியாவை திருடிவிட்டார் என்ற குற்றச்சாட்டை சட்ட ரீதியாக வென்று ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தொடங்குகிறார் மார்க் சக்கர்பெர்க். ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் விளையாட்டாக ஆரம்பித்த விஷயம் இன்று உலகை இணைக்கும் முயற்சியில் கொண்டு வந்து விட்டிருக்கிறது. இன்னமும் "ஃபேஸ்புக்கா அப்படின்னா என்ன.." என்று கேள்வி கேட்கும் தலைமுறையையும் இந்த உலகத்துக்குள் கொண்டு வர மார்க் போடும் திட்டங்கள் எல்லாம் ஜேம்ஸ் பாண்ட் ரகம்.
இப்போது மெகா பூதம் ஒன்று நம் கண்முண்ணே வந்து நிற்கிறது. பக்கத்து சீட்ல உட்கார்ந்து இருக்கற ஃப்ரெண்டு பத்து நிமிஷம் டீ குடிக்கப் போனாலே அவரோட ஃபேஸ்புக்ல ஜாலி ஸ்டேட்டஸ் தட்டும் தலைமுறை இது. 10 நிமிஷத்துல உங்களோட ஒட்டுமொத்த ஃபேஸ்புக் டேட்டாவையும் யாரோ ஒருவரால் எடுக்க முடியும் என்றால் எவ்வளவு அதிர்ச்சியளிப்பதாக இருக்கும்? ஷாக் குறையாமல் கேளுங்கள். இதில் நீங்கள் அனுப்பிய இன்பாக்ஸ் மெஸேஜ்களும் அடங்கும்.
நீங்கள் உங்கள் காதலிக்கு அனுப்பிய ஹார்ட்டின் எமோஜிக்கள் முதல் ப்ரப்போஸ், கோலின்னு ஒரு புது ப்ளேயர் செமயா அடிக்குறான்ப்பா அப்படினு தட்டின ஸ்டேட்டஸ், டிமானிடைஷேசன் அப்போ ஏடிஎம்ல வரிசைல நின்னது. நெடுவாசல் பிரச்னைக்கு குரல் கொடுத்தது என அனைத்து ஸ்டேட்டஸ்களும், நீங்கள் ''ஒன்லி மீ'' ப்ரைவஸியில் வைத்திருக்கும் உங்களது யாருக்கும் பகிராத புகைப்படமும் இன்னொருவர் கைக்குச் செல்ல அதிகபட்சம் 30 நிமிடங்கள் போதும்.
"நான் ஃபேஸ்புக்குக்கு வந்து 14 வருஷம் ஆச்சு. இவ்வளவு ஸ்டேட்டஸ், மெஸேஜ், போட்டோ எல்லாத்தையும் எப்படி 30 நிமிஷத்துல டவுன்லோட் பண்ண முடியுமா?" என்றால், முடியும். ஃபேஸ்புக் நிறுவனம் உங்களோட மொத்த டேட்டாவையும் ஒரே க்ளிக்ல டவுன்லோட் பண்ணுற ஆப்ஷன கொடுத்துருக்கு.
இதுக்கு ஒருவருக்கு தேவைப்படும் அடிப்படை தேவை ஒரு லாக் இன் ஆன ஃபேஸ்புக் ஐடிதான். நிறையா இடங்கள்ல நாம ஃபேஸ்புக் பயன்படுத்துறோம். அவசரத்துக்கு ப்ரொஃபைல் செக் பண்ண ப்ரெண்ட்ஸ் மொபைல், ப்ரெளசிங் சென்டர், ஆபீஸ் கம்ப்யூட்டர் இது எல்லாத்துலயும். ஹைலைட்டா சில மால்கள், சினிமா திரையரங்குகள்ல வைச்சிருக்குற கம்ப்யூட்டர்லயே ஃபேஸ்புக் பாக்குற சிலரையும் நாம பார்த்திருப்போம்.
நீங்கள்லாம் லாக் அவுட் பண்ண மறந்துட்டாலோ இல்ல உங்களோட பாஸ்வேர்டு யாருக்காவது தெரிஞ்சுட்டாலோ மொத்த டேட்டாவும் அவங்ககிட்ட போய்டும்ங்றதுல மாற்றுக்கருத்தே இல்லை. அப்படி டவுன்லோட் செய்த ஃபைலில் என்னவெல்லாம் இருக்கும் என்று ஒரு நீண்ட பட்டியல் வாசிக்கிறது ஃபேஸ்புக். இதில் க்ரேடிட் கார்டு தகவல் துவங்கி ஐபி அட்ரஸ், ஃபேஸ்புக் பேஜ் தகவல் என 70 தகவல்களை ஒற்றை க்ளிக்கில் தந்துவிடுகிறது ஃபேஸ்புக்.
ஃபேஸ்புக் தரும் தகவல்கள் விவரம் இதோ...
இந்த டேட்டாவை டவுன்லோட் செய்வது எப்படி?
ஃபேஸ்புக் செட்டிங்கில் ''Download Facebook Copy'' என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை க்ளிக் செய்தால் உங்களது டேட்டா மொத்தமும் காப்பி எடுக்க துவங்கிவிடும். அதன் பின் உங்களுக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் வரும் அதை மொபைலில் வை-பை மூலமாகவோ அல்லது கணினியில் அதிவேக இணைய சேவை மூலமாகவோ டவுன்லோட் செய்ய முடியும். அவ்வளவுதான் ஒரே ஃபைலில் ஒட்டுமொத்த டேட்டாவும் கொட்டிவிடும்.
Comments
Post a Comment