தமிழகத்தின் டாப் 10 கல்வி நிறுவனங்கள்!
தமிழகத்தின் டாப் 10 கல்வி நிறுவனங்களில் முதலிடத்தில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரநிலை கட்டமைப்பு தேசிய அளவில் சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலை நேற்று(ஏப்ரல் 4) வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் கல்வி, கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி,பட்டப்படிப்பு முடிவுகள் மற்றும் கண்ணோட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தமிழகத்திலிருந்து 37 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.
அவற்றில் முதல் 10 தமிழக கல்லூரிகள்:
1. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி (இடம் 3).
2. சென்னை மாநில கல்லூரி (இடம் 5).
3.சென்னை லயோலா கல்லூரி (இடம் 6).
4.சென்னை மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி (இடம் 10).
5.கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இடம் 11).
6.கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி (இடம் 16).
7.சென்னை பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரி(இடம் 22).
8.திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி (இடம் 28).
9.சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி (இடம் 30).
10. கோவை அரசு கலைக் கல்லூரி (இடம் 31)
மேற்கண்ட பட்டியலில் சென்னையிலிருந்து 5கல்லூரிகளும், கோவையிலிருந்து 3 கல்லூரிகளும், திருச்சியிலிருந்து 2 கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன.
Comments
Post a Comment