சத்துணவு சாப்பிடுவோருக்கு மட்டும் இலவச சீருடை?
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும்மாணவர்களுக்கே சீருடை வழங்கப்படுகிறது. இதனால் மற்றவர்கள் சீருடை அணியாமல் பள்ளிக்கு செல்கின்றனர்.
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன.ஒருவருக்கு நான்கு சீருடைகள் தரப்படும். அவை சத்துணவுசாப்பிடும் மாணவர்களுக்கே வழங்கப்படுகின்றன. இதனால் அவர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு சீருடை அணிந்து செல்கின்றனர். மேலும் சீருடைகளும் தரமின்றி இருப்பதால் ஒரு சீருடை இரண்டு மாதங்கள் கூட தாங்குவதில்லை. வருகிற கல்வியாண்டில் (2018-19) மற்றநலத்திட்டங்கள் போன்று வேறுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
மேலும் அவை தரமானதாகஇருக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.ஆசிரியர்கள் கூறியதாவது: 80 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே சத்துணவு, சீருடைகள் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 20 சதவீதத்தினரை வெளியில் சீருடை எடுக்க சொன்னாலும், ஒருசிலர் மட்டுமே எடுக்கின்றனர், என்றனர்.

Comments
Post a Comment