பழைய புத்தகங்கள் சேகரிக்க இயக்குனர் உத்தரவு
புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது.
இதையடுத்து, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும், பழைய புத்தகங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மரங்களின் அழிப்பை குறைக்கும் வகையில், புத்தகங்கள் அச்சிடுவதையும் குறைக்க வேண்டியுள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின் புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக புத்தக வங்கியை துவங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment