FLASH NEWS : "சிறுதுளி" சகோதரர் "ஆசிரியர் திரு.ஜெயா வெங்கட்" இறைவனடி சேர்ந்தார்

"மகிழ்வித்து மகிழ்" சகோதரர் திரு.ஜெயா வெங்கட் இதய அடைப்பு காரணமாக இன்று இறைவனடி சேர்த்தார்.

தனது பள்ளி மட்டுமல்லாமல் தமிழகப் பள்ளிக் குழந்தைகளின் முகங்களில் மகிழ்ச்சியைப் பார்ப்பதையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் நண்பர் Jaya Venkat .

இன்று குழந்தைகளோடு சென்னையைச் சுற்றி மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே மரணத்தைத் தழுவிய செய்தி மனதைப் பெருங்கனமாக ஆக்கியிருக்கிறது.

"மகிழ்வித்து மகிழ்"என உயிர்மூச்சின் இறுதிவரை தம் மாணவர்களை மகிழ்விக்க சென்னைக்கு அழைத்த சென்று மகிழ்ந்திருக்கும்போதே
சிறுதுளி Jaya Venkat நம்மை விட்டுப் பிரிந்தார்....

அழுவதைத் தவிர வேறென்ன செய்வது!

"மகிழ்வித்து மகிழ்" என்றதுமே தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆசிரியர்களும் மாணவர்களும் உச்சரிக்கும் பெயர் - ஜெயா வெங்கட். அன்பு நிறைந்த மனிதர் இன்று நம்மை விட்டு பிரிந்து மீளா துயரை தந்து சென்று விட்டார்.

யார் இந்த ஆளுமை ? பல ஆயிரம் கண்களில் விழிகளில் விழிநீர் வர காரணம் என்ன ?

இருபது ஆண்டுகளுக்கு முன் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
அன்பினால் அரவணைத்த ஆசிரியர் இவரை வழியொட்டி இவரது மாணவர்கள் அற வழியில் இவருடன் கைக்கோர்த்தனர்.

2010 ல் அரசு பணியில் பாதம் பதித்தார். 10 வருடமாக இவரது அன்பால் விளைந்த 50 மாணவர்கள் இவருடன் இணைந்து "சிறுதுளி " எனும் ஆசிரியர் - மாணவர்கள் கூட்டமைப்பை உருவாக்கினர். தாங்களே இணைந்து மாதம் ஒரு தொகையை திரட்டி அறம் செய்தனர். அது பல லட்சங்கள் ரூபாய் அறம் வானுயர வளர்ந்துள்ளது.

சிறுதுளி அரசு பள்ளிகளின் மீது தனது அன்பை பொழிந்தது. தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் சிறுதுளியால் மகிழ்ந்துள்ளன.

மாணவர்களுக்காக அகராதி, புத்தகம் , எழுதுபொருட்கள், தூய்மை பொருட்கள் என தேடி தேடி தேவையானதை வழங்கி வந்தார்.

மேலும் மாணவர்களுக்காக குறும்படம் போட்டி, வாழ்த்து அட்டை போட்டி, நலம் தரும் உணவு போட்டி, உரையாடல் , கவிதை என பல போட்டிகளை அரசு பள்ளியில் நடத்தி உயரிய பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கி வந்தார்.

தன்னிடம் படித்து மருத்துவர் ஆன மாணவர்கள் மூலம் உளவியல் அலோசனையை அறமாக வழங்கி வந்தார்.

இரவு 12 மணி , 4 மணி எந்த நேரமானாலும் மாணவர்களுக்காக சிந்தனையை விதைத்து அவர்களுக்காக அர்பணித்த மிக சிறந்த ஆசிரியர் .

மேலும் பல அறங்கள் மூலம் மாணவர்கள் மனதில் ஆழ பதிந்தவர் சிறுதுளி ஜெயா வெங்கட்.
தமிழகத்தின் பல்வேறு ஊரிலுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளின் அன்பும் கண்ணீரும்!

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை
- www.asiriyar.com

Comments

  1. நல்ல நண்பரை இழந்து விட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

      Delete
  2. இன்னும் என் மனம் ஏற்கவில்லை ஜெயாவெங்கட் இறந்துவிட்டார் என்பதை. அந்த செய்தி பேரிடியாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல்

    ReplyDelete
  3. RIP. Very Shock news. My heartiest condolences to his family. We lost a Very sicere, dedicated & tealent teacher.

    ReplyDelete
  4. A friendship since 1995, college senior. .. unexpected demise ...unable to come out from shock.

    ReplyDelete
    Replies
    1. Hi Vijayan, Am Venkatesh Brother . Please message me your contact number to 9841519730. I will call you at the earliest.

      Delete

Post a Comment