விரைவில் ரூ.350 நாணயம்: ஆர்பிஐ அறிவிப்பு!

சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கின் 350ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரூ.350 நாணயம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாணயம் 34.65 கிராம் முதல் 35.35 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.அதில் அசோகத் தூண் சின்னம் மற்றும் சத்திய மேவ ஜெயதே என்ற வாசகமும் இடம்பெற உள்ளன.

44 மிமீ விட்டம் கொண்ட இந்த நாணயத்தில் அலாய் சில்வர் (50 சதவீதம்), செம்பு (40 சதவீதம்), நிக்கல் (05 சதவீதம்), மற்றும் துத்தநாகம் (5 சதவீதம்) சேர்க்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ரூ.350 நாணயம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அச்சிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Comments