அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கு ரூ.25,362 கோடி

அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களுக்காக ரூ.25,362.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல், அரசுப் பணியாளர்களுக்கான சம்பளங்களும் படிகளும், ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியங்களும் திருத்தப்பட்டு, உயர்த்தி வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திருத்தத்தினால் ஆண்டொன்றுக்கு ரூ.14,718.90 கோடி அளவில் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது.
2018 - 2019-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரசுப் பணியாளர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காகவும், ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காகவும், பிரீமியத் தொகை செலுத்துவதற்காக, முறையே ரூ.260 கோடியும், ரூ.126.25 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வுகாலப் பலன்களுக்காக நிதி நிலை அறிக்கையில் ரூ.25,362.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்