மாவட்டங்களில் கல்வித்துறை இணை இயக்குநர்கள் அலுவலகம்
அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, 20 இணை இயக்குநர்கள், 'நோடல் ஆபீசர்ஸ்' ஆக நியமிக்கப்பட்டுள்ளனர். இணை இயக்குநர்களுக்கு, ஒன்றுஅல்லது இரண்டு மாவட்டங்களை சேர்த்து பொறுப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
மூன்று மாவட்டங்களை ஒருங்கிணைத்து கல்வித் துறை இணை இயக்குநர் அலுவலகம், இணை இயக்குனர்களை ஒருங்கிணைத்து மண்டல இணை இயக்குநர்அலுவலகம், மாவட்டங்களில்அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று இணை இயக்குநர்களை ஒருங்கிணைத்து மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மதுரையில் அமைக்கப்படுகிறது. இணை இயக்குநர்களுக்கான அலுவலகம் தேடும் பணியில், கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை இணை இயக்குநர்கள் சென்னையில் இருந்து, பணிகளை கவனித்தனர். அரசின் சீர்திருத்த நடவடிக்கையால்,இனி மாவட்டங்களில் அலுவலகம் அமைத்து கவனிப்பார்கள், என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment