காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.
பருவகாலத்திற்கு முன்னதாக காவிரி வரைவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்த நீதிமன்றம், வரைவு திட்டத்தை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.  இந்த பருவத்திற்குள்ளேயே ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும், நீர் பங்கீடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கே உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

Comments