நினைத்த கல்லூரியில், நினைத்த பிரிவில் இடம் வேண்டுமா?உங்கள் கனவை நனவாக்க 15 டிப்ஸ்"
மாணவர்களாகிய நீங்கள் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு கல்லூரி வாழ்க்கை மிகவும் அவசியமான ஒன்றாகும்.
9 அல்லது 10 ஆண்டு கால வெற்றிகரமான பள்ளி வாழ்க்கைக்குப் பின் அமையும் இந்த கல்லூரி வாழ்க்கையை பெறுவது,
உங்களுக்கு கடினமானதாக தோன்றினாலும், ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை இதன் மூலம் உங்களால் அமைத்துக் கொள்ள முடியும்.
ஆரம்பக்கல்வி, நடுநிலைக்கல்வி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி இவற்றையெல்லாம் வெற்றிகரமாக கடந்து வந்தபிறகு, அடுத்து கல்லூரியில் சேர்ந்து படிப்பது குறித்து சிந்திக்கும் நேரம் இது.
இந்நிலையில் நாம் விரும்பும் முதல் நிலைக் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் எவ்வாறு இடம் பிடிப்பது என்பது குறித்து, கல்வி நிபுணர்கள் வழங்கிய 15 விதமான முக்கிய ஆலோசனைகள் இதோ.
1. முன்கூட்டியே தயாராதல்:
நடுநிலைப்பள்ளியில் படிக்கும்போதே ஒரு மாணவனுக்கு கல்லூரி குறித்த சிந்தனைகள் ஏற்படுவது நல்லது.
அடுத்து நாம் எந்தப் பாடப்பிரிவுகளில் சேர்ந்தால் பிடித்தமான கல்லூரிக் கல்வியை எதிர்காலத்தில் பெற முடியும் என்பது குறித்து சிந்தித்து, அதற்கேற்ப தங்களது பாடப்பிரிவுகளை தேர்வு செய்து, முன் கூட்டியே தயாராவது அவசியமாகும்.
இவ்வாறு அவர்கள் முன் கூட்டியே தயாராவதால் அவர்களுக்கு பிடித்த முதல் நிலை கல்லூரிகளில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
2. உங்களை அறியுங்கள்:
உங்களைப்பற்றி நீங்கள் அறியாமல் இருக்கும் நிலையில், உங்களின் வருங்காலத் திட்டங்கள், குறிக்கோள்கள், மற்ற மாணவர்களை விட நீங்கள் எந்த அளவு தகுதி பெற்றுள்ளீர்கள் என்பது பற்றி யாருடனும் பேச முடியாது. எனவே உங்களைப்பற்றி அறிவது நல்லது.
3. பெற்றோரின் முழு ஆதரவு:
ஒரு சிறந்த கல்லூரியில், பிடித்தப் பாடப்பிரிவில் சேர்வது ஒரு கடினமான நடைமுறையாகும். எனவே, இதில் பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
எந்த கல்லூரியில் சேர்வது என்பது குறித்த சிபாரிசுகளையும், அதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும் அவர்களிடமிருந்து பெறலாம்.
கல்லூரியில் சேருவதற்கான நிதி நிலை உங்கள் குடும்பத்தினரிடம் இல்லை என்றாலும் வெளியிலிருந்து நிதியைப் பெறும் வசதிகள் உள்ளன. இதில் பெற்றோரின் முழு ஒத்துழைப்பு பெற வேண்டியது அவசியம்.
4. பள்ளி ஆசிரியர்களுடன் ஆலோசனை:
உங்கள் பள்ளிக்கூடத்திலுள்ள கல்வி ஆலோசகரை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவரால் கல்லூரியில் சேர்வது குறித்த அனைத்து தகவல்களையும் தர முடியும்.
கல்லூரிகளில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு, கட்டண விவரங்கள், பாடத் தேர்வு குறித்த அனைத்து விவரங்களையும் அவரிடமிருந்து பெறலாம்.
மேலும் உங்களுக்கு பிடித்த ஆசிரியர்களிடமிருந்தும் எந்த கல்லூரியை தெரிவு செய்வது என்பது குறித்த ஆலோசனைகளைப் பெறலாம்.
குறிப்பிட்ட கல்லூரியில் சில பாடப்பிரிவுகளில் சேர பள்ளியின் சிபாரிசு கடிதம் தேவையென்றால் அதையும் மறக்காமல் பெறுவது நல்லது.
5. முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துதல்:
கல்லூரியில் சேர்வதற்கு முன் படிக்க விரும்பும் முக்கியப் பாடப்பிரிவுகள், அதில் சேருவதற்கான தகுதி காண் தேர்வு, தரவாரியான கல்லூரிகளின் பட்டியல், எதிர்பார்க்கும் தர நிர்ணயங்கள் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
குறிப்பிட்ட கல்லூரியில், குறிப்பிட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்காத நிலையில், மீண்டும் உரிய தகுதியைப் பெரும் வகையில் திறமையை, மதிப்பெண்களை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.
மேலும் உயர் கல்வியில் சேர்வதற்கான PSATs, SATs (or ACT) தேர்வுகளையும் எழுதலாம்.
6. சிறு அமைப்புகளில் அல்லது கிளப்களில் இணைதல்:
தங்களிடம் சேர விரும்பும் மாணவர்களிடமிருந்து அதற்கான தகுதிகளையும், சுய விபரங்களையும் பல்கலைகழகங்களும், கல்லூரிகளும் எதிர்பார்கின்றன. இதற்கான முன்னேற்பாட்டுடன் இல்லாத போது மாணவர்கள் அங்குள்ள மாணவர் குழுக்கள் மற்றும் மாணவர்களுக்கான கிளப்களில் ( (including sports teams) சேர்ந்து மொத்தமாக பயனடையலாம்.
7. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் குறித்த ஆய்வு:
தாங்கள் விரும்பும் கல்லூரியில் சேர்வதற்கு முன் அனைத்துக் கல்லூரிகள், பல்கலைகழகங்கள் குறித்த ஆய்வை செய்வது பல நன்மைகளைத் தரும். முதலில் இதற்காக சுமார் ஆயிரம் கல்வி நிறுவனங்களையாவது ஆய்வு செய்து அதிலிருந்து நல்ல கல்வி நிறுவனங்களின் பட்டியலைத் தயாரிக்கலாம்.
அடுத்து, சிறந்த கல்லூரியை தெரிவு செய்து அங்குள்ள சேர்க்கை அலுவலர்களிடம் தனது தகுதியை நிரூபித்து நுழைதல்.
8. கல்லூரிகள் நடத்தும் கல்விக் கண்காட்சி:
இணைய தளம் மற்றும் புத்தகங்கள் மூலமாக ஏராளமான கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் பட்டியலைப் பார்த்து ஆய்வு செய்து, சிறந்த கல்லூரியை தெரிவு செய்யும் முறையைக் காட்டிலும் இன்னொரு சிறந்த முறையும் உள்ளது.
அது கல்லூரிகள் நடத்தும் கல்விக் கண்காட்சிக்கு செல்வதுதான். இந்த முறையில் நீங்கள் சேர்க்கை அலுவலர்களை நேரில் சந்தித்து தகவல்களை அறிவதன் மூலம் பலன் பெறலாம்.
9. பட்டியல் தொகுப்பு:
கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் குறித்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் கல்வி நிபுணர்களுடன் விவாதிப்பதோடு, குறைந்தபட்சம் ஒரு கல்லூரி கண்காட்சியிலாவது பங்கேற்று விபரங்கள் அறிந்து கொண்ட பிறகு, இறுதி பட்டியலைத் தொகுக்கவும்.
இப்போது நீங்கள் ஏற்கனவே தயாரித்த பட்டியல் அளவில் குறைந்து வருவதை உணர்வீர்கள்.
கடைசியில் நாம் விரும்பும் கல்லூரி வெகு அருகில் நெருங்கி வருவதை உணரலாம்.
10. கடைசி பட்டியல்:
இப்போது நீங்கள் கடைசியாக வைத்திருக்கும் பட்டியலிலுள்ள கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள ஹாஸ்டல் வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் பார்வையிடலாம்.
முதலில் கல்வித் தரம் மற்றும் கல்விக்கட்டணம் குறித்த விசாரணைகள் முடிந்தவுடன், பிடித்திருந்தால் இரவு அங்கு தங்கி கூட அங்குள்ள சூழல்களை ஆய்வு செய்யலாம்.
ஏனெனில் ஒரு மாணவனுக்கு அடுத்த வீடு என்பது கல்லூரிதான். ஏனெனில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அவர் அங்குதான் தங்கப்போகிறார்.
11. ஒழுங்கு முறை:
விண்ணப்பம் அனுப்பும் பணிகள் தொடங்கியதும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் குறித்த ஆய்வுத் தகவல்கள், ஆசிரியர்களிடமிருந்தும், கல்வி வழிகாட்டி நிபுணர்களிடமிருந்தும் பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் பல்வேறு விபரங்களை குறிப்புகளாக ஒரு சீட்டில் எழுதி வைக்க வேண்டும்.
ஒழுங்கு முறையாக நாம் தொகுத்த இந்த விபரங்கள் கடைசி நேரத்தில் நமக்கு அதிக அதிக அளவில் கை கொடுக்கிறது.
ஒரு எளிய இந்த குறிப்புச் சீட்டு நமது பணிகளை விரைவாகவும், எளிமைப்படுத்தவும் உதவுகிறது.
12. சரியான நேரத்தில் விண்ணப்பம்:
அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பம் அனுப்புவதில் கடைசி நேரத்தில்தான் மும்முரமாக இருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவு நல்லது. பொதுவாக டிசம்பர் மாதத்துடன் அனைத்து கல்லூரிகளிலும் விண்ணப்பிப்பதற்கான கால அளவு முடிவடையும்போது அதற்குள் விண்ணப்பது நல்லது.
13.பயன்பாட்டு கட்டுரை எழுதுதல்:
சில கல்வி நிறுவனங்கள் சேர்க்கைப் பணிகளில் மட்டுமன்றி பல்வேறு பயன்பாடுகளுக்கும் உரிய தகுதியான மாணவர்களை அறிந்துகொள்ள பயன்பாட்டு கட்டுரைகள் எழுதும் முறையை கையாள்கின்றன.
இந்த வகையில் விண்ணப்பதாரர்கள் தங்கள் திறமையை வெளிக் காட்டுவதற்கு இந்த முறை மிகவும் பயனாக உள்ளது.
இந்த கட்டுரைகள் உங்களிடமிருக்கும் கல்வித் திறனை வெளிப்படுத்துகிறது. அதே சமயம் உங்கள் சுய விபரங்களையும், இதற்கு முன் படித்த பாடத்திட்ட முறை மற்றும் அதன் மூலம் பெற்ற கல்வித்தரம் ஆகியவற்றை ஒரு கதைபோல் எடுத்துச் சொல்வதால் இம்முறையை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளன.
எனவே மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியில், படிப்பில் சேர இம்முறை வெகுவாக கை கொடுக்கிறது.
14. விண்ணப்பத்துடன் அடங்கிய மற்ற விபரங்கள்:
கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களுக்கு அனுப்பும் விண்ணப்பத்துடன், சேர்க்கை அலுவலர்கள் எதிபார்க்கும் விபரங்களை மட்டுமே மாணவர்கள் அனுப்ப வேண்டும்.
ஆனால் தேவையின்றி பல விபரங்களை பலர் அனுப்பிவிடுவதால் அதை அலுவலர்கள் பார்ப்பதில்லை.
பல சமயங்களில் மாணவர்கள் விண்ணப்பத்துடன் தங்கள் சோகக்கதைகளையும் அனுப்பி வைத்துவிடுவதாக சேர்க்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது மாணவர்கள் குறித்து குறைவான மதிப்பீட்டுக்கு வழி வகுப்பதால் தேவையற்ற விபரங்களை அனுப்ப வேண்டாம்.
15. சமூக ஊடகங்கள் மற்றும் இணையதள பயன்:
தற்போது பெரிய கல்வி நிலையங்கள் தங்கள் செயல்பாடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து முகநூல், டுவிட்டர் மூலம் அறிவிக்கின்றன.
எனவே மாணவர்கள் இவற்றை தொடர்வதன் மூலம் பல விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம். பல கல்வி நிபுணர்களும் மேற் கண்ட சமூக ஊடகங்களை பயன்படுத்திவருவதால் அதையும் தொடரலாம்.
தேவைப்பட்டால் அவர்களின் தனிப்பக்கங்களில் நுழைந்து உங்கள் கருத்தை வெளிப்படுத்தலாம். கேள்விகள் கேட்கலாம்.
நல்ல படிப்பை தேர்ந்தெடுத்து, தகுதியான கல்லூரிகளில் சேர இவை பயனுள்ளதாக இருக்கும். நீங்களும், உங்களிடமுள்ள கல்வித்திறன், மற்றும் இதர தனிப்பட்ட திறன்கள் குறித்த விபரங்களை ஊடகங்களில் யூ ட்யூப் மூலம் வெளியிடலாம்.
பேஸ் புக் வழியாக நீங்கள் விரும்பும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நட்பை பெறுவதன் மூலம் அக் கல்லூரியின் வளாகத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இப்படி பல விஷயங்களை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்து கொள்வதன் மூலம் நீங்கள் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைத்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளலாம்.
Comments
Post a Comment