1, 2ம் வகுப்புகளுக்கு கணினியில் தேர்வு!!!

ராமநாதபுரம், அரசுப்பள்ளி முதல், 2ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கையடக்க கணினியில் தேர்வு நடத்தப்படவுள்ளது.

தமிழக அரசின் புதிய கல்வித்திட்டத்தின் கீழ், ஜனவரி முதல் 13 மாவட்டங்களை சேர்ந்த 173 அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கையடக்க கணினியை பயன்படுத்தி கற்பித்தல், தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


ராமநாதபுரம், அரசுப்பள்ளி முதல், 2ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கையடக்க கணினியில் தேர்வு நடத்தப்படவுள்ளது.தமிழக அரசின் புதிய கல்வித்திட்டத்தின் கீழ், ஜனவரி முதல் 13 மாவட்டங்களை சேர்ந்த 173 அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கையடக்க கணினியை பயன்படுத்தி கற்பித்தல், தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய முறையில் பயின்ற மாணவர்களுக்கு ஏப்.,9, 10, 11, 12 தேதிகளில் ஆண்டுத் தேர்வு நடக்கிறது.இதுவரை, 40 மதிப்பெண்கள் கல்வி இணை செயல்பாடுகளுக்கும், 60 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் 40 மதிப்பெண்களுக்கு மட்டுமே எழுத்து தேர்வு நடத்தப்படும். 20 மதிப்பெண்களுக்கு கையடக்க கணினி வழியாக மாணவர்கள் விடையளிக்க வேண்டும். பதில்கள் இணையதள உதவியுடன் திருத்தப்படும். தமிழ், ஆங்கிலம், கணக்கு, சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய நான்கு பாடங்களுக்கும் இதுபோல், புதிய முறையில் தேர்வு நடத்த உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய முறையில் பயின்ற மாணவர்களுக்கு ஏப்.,9, 10, 11, 12 தேதிகளில் ஆண்டுத் தேர்வு நடக்கிறது.இதுவரை, 40 மதிப்பெண்கள் கல்வி இணை செயல்பாடுகளுக்கும், 60 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் 40 மதிப்பெண்களுக்கு மட்டுமே எழுத்து தேர்வு நடத்தப்படும். 20 மதிப்பெண்களுக்கு கையடக்க கணினி வழியாக மாணவர்கள் விடையளிக்க வேண்டும். பதில்கள் இணையதள உதவியுடன் திருத்தப்படும். தமிழ், ஆங்கிலம், கணக்கு, சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய நான்கு பாடங்களுக்கும் இதுபோல், புதிய முறையில் தேர்வு நடத்த உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்