இடைநிலை ஆசிரியர்கள் சம்பளத்தில் வேறுபாடு

தமிழகத்தில் ஒரே நிலையில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில், 2009க்கு பின் பணியில் சேர்ந்தோரின் சம்பள நிர்ணய பாரபட்சத்தால் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதிய குழு பரிந்துரையைமத்திய அரசு 1.1.2006 முதல் அமல்படுத்தியது. இடைநிலைஆசிரியருக்கு அடிப்படை ஊதியம் 4500 ரூபாயில் இருந்து (1.86 மடங்கு) 9300 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இத்துடன் கூடுதலாக 4200 தர ஊதியம் (கிரேடு பே) வழங்கப்பட்டது.ஆனால் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.86 மடங்கு என்ற உயர்வின்றி அடிப்படை ஊதியம் 4,500 லிருந்து 5,200 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

பின் நடந்த போராட்டங்களால் 1.6.2009க்கு முன் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 4500 ரூபாயில்இருந்து 8370 ரூபாய் என உயர்த்தி சம்பள நிர்ணயம் செய்யப்பட்டது.ஆனால், 1.6.2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.86 மடங்கு அதிகரிப்பு பின்பற்றப்படவில்லை. இதனால் அவர்களுக்கு 5200 ரூபாய் (தர ஊதியம் 2800 ரூபாய் தனி) என்ற சம்பள அடிப்படையே இதுவரை பின்பற்றப்படுகிறது. இதில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடக்கப் பள்ளிஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜன, "ஆறாவது ஊதிய குழுவில் ஏற்பட்ட பாதிப்பால் ஒரே பள்ளியில், 1.6.2009க்கு முன் மற்றும் பின் நியமனமான ஆசிரியருக்கு இடையே 14800 ரூபாய் வரை வேறுபாடு உள்ளது.ஏழாவது ஊதிய குழுவிலும் இப்பாதிப்பு தொடர்கிறது. இவற்றை நீக்கி நியாயமான சம்பளம் நிர்ணயிக்க வேண்டும்," என்றார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்