தமிழக மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சர் பெருமிதம்

''தமிழக மாணவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள்; எதையும் சந்திக்கக்கூடிய திறமைசாலிகள்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கரட்டடிபாளையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:

கோபி தொகுதியில், ஜூன், இரண்டாவது வாரத்தில், தனியாரும், அரசும் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. இளைஞர்களின் தகுதிக்கேற்ப, வேலை கிடைக்க, அரசு முனைப்புடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு தேர்வை சந்திக்கும் வகையில், தமிழக பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.தமிழக மாணவர்களை பொறுத்தவரை, அறிவாற்றல் மிக்கவர்கள். எதையும் சந்திக்கக் கூடிய திறமை வாய்ந்தவர்கள். கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்களை கண்டு அச்சப்படத் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!