கூட்டுறவு சங்க தேர்தல் : இடைக்கால தடை ஏப்ரல் 23-ம் தேதி வரை தொடரும்.

கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை ஏப்ரல் 23-ம் தேதி வரை தொடரும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் விரிவான ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர் மனுதாரரான அதிமுக தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Comments